சாலையில் சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடிய விராட் கோஹ்லி: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெருக்களில் சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியானது சமீபத்தில் வங்கதேச அணிக்கெதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது.

அந்த நேரத்தில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூட்டான் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

வங்கதேச அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நாளை ஹோல்கர் மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் விராட்கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் பிச்சோலி மர்தானா பகுதியில் விளம்பர சூட்டிங்கின் போது, அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து விராட்கோஹ்லி தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்