சமையல்காரராக மாறப்போகும் விராட் கோஹ்லி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் சமையல் கலையை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாராம் விராட் கோஹ்லி.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் அணித்தலைவரான விராட் கோஹ்லி.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சிறுவயதிலிருந்தே உணவுப்பொருட்கள் மீது ஆர்வம் அதிகம்.

அதிகமாக துரித உணவுகளை எடுத்துக் கொள்வேன், சிக்கன், பட்டர் சிக்கன், பீன்ஸ் குருமா தொடங்கி தெருவோர கடைகளில் சாப்பிட்டுள்ளேன்.

ஒரு உணவின் சுவையை நன்கு அறிந்து வைத்துள்ளதால், சமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே ஓய்வுக்கு பின் சமையல் கலையை கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers