விளையாட்டில் ஊழல்- சூதாட்டத்தை ஒடுக்க! புதிய சட்டத்தை அமல்படுத்தியது இலங்கை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியை பாதித்துள்ள ஊழல்களைத் தடுக்கும் முயற்சியில் மேட்ச் பிக்சிங்கிற்கு கடுமையான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை, சூதாட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டி மேட்ச் பிக்ஸிங் என்ற குற்றம்சாட்டப்பட்டது உட்பட ஊழல் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டை பாதித்துள்ளன.

இலங்கையில் சூதாட்டம் ஏற்கனவே சட்டவிரோதமானது, ஆனால் புதிய விதிகள் இலங்கையர்கள் வெளிநாட்டு போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடை செய்துள்ளது.

புதிய சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 100 மில்லியன் ரூபாய் வரை (555,000 டொலர்) அபராதம் விதிக்கப்படலாம்.

பாராளுமன்றத்தால் ஒருமனதாக குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பேசிய இலங்கை விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ , இந்த சட்டத்தைத் தடுக்க பலர் முயன்றனர், ஆனால் அது இன்று எடுத்துக் கொள்ளப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டின் உள்ளுர் நிர்வாகம் உச்சி முதல் பாதம் வரை சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கையை உலகின் மிக ஊழல் நிறைந்த கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாகக் கருதுவதாகவும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்