அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஷேன் வாட்சன் நியமனம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஏசிஏ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியானது அவருக்கு "விளையாட்டுக்குத் திரும்ப" உதவும் என்று கூறியுள்ளார்.

திங்கள்கிழமை இரவு இங்கு நடந்த ஏ.சி.ஏ.வின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏ.ஜி.எம்) இந்த நியமனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வாட்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஏ.சி.ஏ-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கு முன் சென்றவர்களின் காலடி தடங்களை நிரப்ப எனக்கு பெரிய காலணிகள் கொடுக்கப்பட்டுள்ளன".

"இந்த வாய்ப்பானது, எனக்கு இவ்வளவு கொடுத்த விளையாட்டிற்கு திரும்ப உதவுவதை பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக வாட்சன் 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக செயல்பட்ட வாட்சன், மூன்று புதிய நியமனங்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழுவில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் தற்போதைய அவுஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ், கிறிஸ்டன் பீம்ஸ் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான லிசா ஸாலேகரும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்