இலங்கை ஜனாதிபதி தேர்தலில் துடுப்பாட்ட ஜாம்பவான் சங்கக்காராவின் நிலைப்பாடு என்ன?

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து ஜாம்பவான் குமார் சங்கக்காரா விளக்கமளித்துள்ளார்.

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கென ஒரு கோடி 60 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்தமுறை வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2019 ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் பிரித்தானியர் அல்லாத முதல் தலைவராக பொறுப்பேற்றுள்ள இலங்கை முன்னாள் கிரிக்கெட வீரர் குமார் சங்கக்காரா, குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

இந்நிலையைில், எந்தவொரு அரசியல் கட்சியையும் நான் ஆதரிக்கிறேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு போலி மீம்கள் குறித்து தயவுசெய்து கவனம் செலுத்த வேண்டாம் என சங்கக்காரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில், சமூக ஊடக மீம்ஸின் படி, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஆதரவாக நான் இப்போது வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்