பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் சிக்கிய இலங்கை ஜம்பவான் சங்கக்காரா முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

2009 பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை அணியில் அங்கம் வகித்த சங்கக்காரா, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) தலைவராக பதவியேற்றுள்ள சங்கக்காரா கூறியதாவது. எம்.சி.சி-யால் முன்மொழியப்பட்ட சுற்றுப்பயணம் பாகிஸ்தானில் நடந்தால் அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆமாம், வாய்ப்பு ஏற்பட்டால், சுற்றுப்பயணத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் நான் நிச்சயமாக அதில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று சங்கக்காரர் மேற்கோளிட்டுள்ளார்.

இலங்கையின் சமீபத்திய பயணத்தின் போது பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பாராட்டிய எம்.சி.சி தலைவராக உள்ள சங்கக்காரா, இலங்கை பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார்.

இது ஒரு சிறந்த சுற்றுப்பயணம், பாதுகாப்பு உண்மையில் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் அவர்கள் இலங்கை அணிக்கு ஒவ்வொரு வசதியையும் வழங்கினர்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து எம்.சி.சி விவாதித்து வருகிறது. வசிம் கான், உலக கிரிக்கெட் குழுவில் பாதுகாப்பு அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் குறித்து எங்களுக்கு வழங்கியுள்ளார் என கூறினார்.

அதாவது, உலக நாடுகள் சுற்றுப்பயணம் செய்வதற்கான பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் ஒரு பெரிய அளவிலான வேலைகளைச் செய்து வருகிறது. ஆனால், நிச்சயமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆரம்பமாகும், மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு ரசிர்கள் முன் விளையாட முடியும் என்று சங்கக்காரா கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்