டோனி வாங்கிய 20 வருட பழமையான கார்: அதன் சிறப்பு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் முதன்முறையாக கிராண்ட் செரோகி டிராக்ஹாக் காரை வாங்கிய கிரிக்கெட் வீரர் டோனி, தற்போது பழமையான நிஸான் ஜோங்கா காரை வாங்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் உலக அடையாளமாக திகழும் வீரர்களில் ஒருவரான டோனிக்கு நாட்டின் மீதும், இந்திய ராணுவத்தின் மீதும் மிகப்பெரிய பற்று உள்ளது.

அதை மெய்ப்பிக்கும் விதத்தில் 20 வருட பழமையான நிஸான் ஜோங்கா 1 டன் (Nissan Jonga 1 Ton) காரை சொந்தமாக வாங்கியுள்ளார் அவர்.

இந்திய ராணுவம் இந்த மாடல் கார்களை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது. பல புதிய வாகனங்களின் வரவுகளை தொடர்ந்து, இந்த கார்கள் ராணுவ சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

டோனி புதியதாக வாங்கியுள்ள இந்த மொடல் 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் இதை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரிடம் இருந்து சொந்தமாக பெற்றுள்ளார் டோனி.

இந்திய ராணுவத்தை நினைவு கூறும் விதமாக இந்த கார் பச்சை வண்ணப்பூச்சில் மிளர்கிறது.

புதியதாக வாங்கிய இந்த வாகனத்தில் தன்னுடைய சொந்த மாநிலமான ராஞ்சி முழுவதும் வலம் வந்துள்ளார் டோனி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers