பிறந்தநாளில் ஜாகீர் கானை அவமானப்படுத்த போய் ட்விட்டரில் அசிங்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் கானை, பிறந்தநாளில் அவமானப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட இளம் வீரரான ஹர்டிக் பாண்டியவை இணையதளவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜாகீர் கான் நேற்றைய தினம் தனது 41 வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

அவருக்கு முன்னாள் அணி வீரர்கள் மற்றும் தற்போதைய இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில் காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டியாவும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது பிறந்தநாள் பதிவில் ஜாகீர் கானின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடிக்கும் வீடியோவை பதிவிட்டு, "என்னை போல நீங்களும் இப்படி சிக்ஸர் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள், இந்திய அணியின் பேட்டிங்கிற்கு சச்சின் எத்தகைய பலமாக இருந்தாரோ, அதேபோல பந்து வீச்சில் பலம் வாய்ந்த ஜாகீர் கானை இப்படியா அவமானப்படுத்துவீர்கள். முடிந்தால் ரோஹித் சர்மா, தோனிக்கு இதுபோன்று சவால் விடுங்கள் என ஆவேசமான கருத்துக்களை பாண்டியவிற்கு எதிராக பதிவிட்டனர்.

இந்த நிலையில் ஹர்டிக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள ஜாகீர் கான், அவரது பதிலில் சில புத்திசாலித்தனத்தையும் நகைச்சுவையையும் சேர்த்துக் கொண்டார். அந்த பதிவில், எனது பேட்டிங் திறன்கள் ஒருபோதும் உங்களுடையது போல் சிறப்பாக இருக்க முடியாது, ஆனால் இந்த போட்டியில் நீங்கள் என்னிடமிருந்து எதிர்கொண்ட அடுத்த டெலிவரி போலவே பிறந்தநாள் நன்றாக இருந்தது” என பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்