பந்த்-ஸ்ரேயாஸ் பிரச்னைக்கு இதான் காரணம்... உண்மையை கூறிய கோஹ்லி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் 4வது துடுப்பாட பந்த்-ஸ்ரேயாஸ் இருவரும் வந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

பெங்களுருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

போட்டியில் இந்திய இன்னிங்சின் போது, ஆரம்ப துடுப்பாட்டகாரர் தவான் ஆட்டமிழந்த நிலையில், நான்காவதாக துடுப்பாட பந்த்-ஸ்ரேயாஸ் இருவரும் களமிறங்கினர். இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

எனினும், இறுதியில் பந்த் களமிறங்கி அணித்தலைவர் கோஹ்லியுடன் இணைந்து துடுப்பாடினார்.

இதுகுறித்து போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி, பந்த்-ஸ்ரேயாஸ் இடையில் ஏற்பட்ட தவறான தகவல் பரிமாற்றமே இந்த குழப்பத்திற்கு காரணம் என கூறினார்.

துடுப்பாட்ட பயிற்சியாளர் இருவரிடம் கலந்துரையாடினார், யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை இருவரும் தவறாக புரிந்துக் கொண்டதே இந்த குழப்பத்திற்கு காரணம்.

பத்து ஓவருக்கு பிறகு ரிஷப் பந்த்தையும் அதற்கு முன்பு ஸ்ரேயாஸையும் களமிறக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இருவரும் குழப்பமடைந்ததால் இவ்வாறு நிகழ்ந்தது என கூறினார்.

மேலும், தேல்விக்கான காரணம் குறித்து விளக்கிய கோஹ்லி, ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்து பாதுகாப்பான நிலையை எட்டும் திட்டத்தோடு நாங்கள் முதலில் துடுப்பாடினோம்.

ஆனால், களம் அதற்கு ஒத்துவரவில்லை என நாங்கள் விரைவாக புரிந்துக்கொண்டோம் என தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்