தொடர் சொதப்பலால் விமர்சனத்திற்குள்ளாகும் ரிஷாப் பண்ட்.... ஜாம்பவான் கூறிய அறிவுரை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் நான்காவது இடத்தில் ஜொலிக்க முடியாது என முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சார்பில் நான்காவது இடத்தில் விளையாடும் இளம் வீரரான ரிஷாப் பண்ட், தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வருவதால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரது ஆட்டம் குறித்து ரவி சாஸ்திரி முதற்கொண்டு நட்சத்திரங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மன், ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டுமென கூறியுள்ளார்.

நான்காவது வரிசையில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் இறக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்ட்யா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை இறக்கிவிடலாம். அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதால் அந்த இடத்தில் விளையாட முடியும் எனக்கூறியுள்ளார்.

நமது இயல்பான ஆட்டம் எல்லா நேரத்திலும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுப்பதில்லை. தோனிக்கு மாற்றாக ரிஷாப் பாண்டை கருதுவதால் அவருக்கு தேவையற்ற அழுத்தம் இருந்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்