தமிழக வீரர் இந்திய கிரிக்கெட் அணியில் இனி இடம்பெறுவது இவர் கையில் தான் உள்ளது! யார் இந்த ரூபா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தற்போதைய தலைவர் என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளை லோதா கமிட்டி சிபாரிசு படி செய்தது.

ஆனால் அந்த உறுப்பினர்கள் போதாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.போடே, எல்.நாகேஸ்வரராவ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் மெய்யப்பன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

ரூபாவும் அவர் தந்தை சீனிவாசனும் டோனிக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவர். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீனிவாசன் குடும்பத்துக்கு சொந்தமானதாகும்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு தமிழக வீரர் தேர்வாக வேண்டும் என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தான் அது தொடர்பான முடிவை எடுக்கும்.

ரூபா சிஎஸ்கே அணி 2 ஆண்டு தடைபெற காரணமாக இருந்த குருநாத் மெய்யப்பனின் மனைவியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்