இனியும் டோனி விளையாடுவதை பார்க்க முடியுமா.! வெளியானது முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான டோனி, அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் கீப்பர்-துடுப்பாட்டகாரரான டோனி அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் விலகி இரண்டு மாத விடுமுறையில் சென்றார்.

டோனியின் விடுமுறை செப்டம்பர் மாதம் பாதியில் முடிவடையும் என்று கருதப்பட்டது, இதனால், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உள்நாட்டு டி-20 போட்டிகளுக்கான சுற்றுப்பயணத்தில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், டோனி தனது விடுமுறையை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நவம்பர் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் மீண்டும் உள்நாட்டு 50 ஓவர்கள் தொடரான விஜய் ஹசாரே கோப்பையிலும், நவம்பர் மாத தொடக்கத்தில் உள்நாட்டில் நடைபெறவுள்ள வங்க தேசத்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் இருந்தும் வெளியேறிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில், இந்தியா மூன்று டி-20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடும் போது அல்லது அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடன் மோதும் போது டோனியை களத்தில் காணலாம்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்