தலைவருக்கே கொலை மிரட்டல்.. சர்ச்சையில் சிக்கிய உலகக் கோப்பை வென்ற மூத்த இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 2011 உலகக் கோப்பை வென்றவருமான முனாப் படேல், வடோதராவைச் சேர்ந்த கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதிய சர்ச்சையை எழுந்துள்ளது.

முனாப் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று வடோதரா சேர்ந்த கிரிக்கெட் சங்கத் தலைவர் தேவேந்திர ஸ்ருதி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார், ஆனால் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

பரோடா கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக சிஎச்எஸ் மேற்கொண்டுள்ள ஊழல் எதிர்ப்பு பிரச்னைகள் காரணமாக தான் குறிவைக்கப்பட்டதாக ஸ்ருதி குற்றம் சாட்டினார். முனாப் தற்போது பி.சி.ஏ இன் கீழ் மூத்த அணிகளுக்கு ஆலோசகராக பணியாற்றுகிறார்.

கிரிக்கெட் சங்கத்தில் ஊழலுக்கு எதிராக நான் குரல் எழுப்பி வருகிறேன், இதனால்தான் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஏதேனும் நேர்ந்தால், முனாப் படேல் பொறுப்பேற்க வேண்டும் என்பதை காவல்துறை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

Image result for munaf patel
google

Navapura காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆர். எம். சவுகான் கூறியதவாது, நாங்கள் ஸ்ருதியிடமிருந்து புகார் பெற்றுள்ளோம், இருப்பினும், அவர் புகாரை பதிவு செய்யவில்லை, எனவே இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் முனாப் புகார்களை மறுத்து, தனது பெயர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

எந்த காரணமும் இல்லாமல் எனது பெயர் இந்த விஷயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. செல்லப்பட்டுள்ளது. நான் கிரிக்கெட் மட்டுமே விளையாடியுள்ளேன், அதை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்வேன்.

அவருக்கு தேர்வுகளில் பிரச்னைகள் உள்ளன, ஆனால் நான் ஒரு அணி ஆலோசகராக இருக்கிறேன், தேர்வுகளில் எனக்கு எந்த பங்கும் இல்லை. இந்த விஷயத்தில் எனது பெயர் தேவையின்றி சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று முனாப் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்