தனது தந்தை இறந்தபோது அருண் ஜெட்லி செய்த செயல்! கலங்கிய விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி(66) இன்று காலமானார். டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்த அவரது மறைவுக்கு, அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லியின் இறப்பு செய்தி கேட்டு தான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறுகையில்,

‘ஸ்ரீ அருண் ஜெட்லி ஜி-யின் மறைவு குறித்து கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர் மிகவும் சிறந்த மனிதர், எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்.

2006ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தபோது, அருண் ஜெட்லி தனது பொன்னான நேரத்தை செலவிட்டு, எனது வீட்டுக்கு வந்து தனது இரங்கலை தெரிவித்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers