இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் அதிரடி மாற்றம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அசந்த டி மெல் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 3-0 என்கிற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன், டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு எதிரான இலங்கை அணியை, புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் தேர்வு செய்துள்ள குழுவில், அசந்த டி மெல் தெரிவுக்குழுவின் தலைவராக செயல்படுவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயல்பட உள்ளார்.

அவருடன் வினோதன் ஜான் மற்றும் சமிந்தா மெண்டிஸ் ஆகியோரும் தேர்வுக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆகஸ்ட் 5-ஆம் திகதி தொடங்கி ஒரு வருட காலத்திற்கு தேசிய தேர்வாளர்களாக பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்