ஆஷஸ் தொடர்: ஒரே போட்டியில் 8 முறை தவறான முடிவெடுத்து சாதனை.. நடுவருக்கு நேர்ந்த கதி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் அலீம் தார் ஆகியோர் தவறாக எடுத்த முடிவு டிஆர்எஸ் மூலம் 10 முறை மாற்றி அமைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

இதன் மூலம் ஒரே போட்டியில் அதிக முறை நடுவர்களின் முடிவு மாற்றி அமைக்கப்பட்ட நடுவர்கள் என இந்தியாவின் சுந்தரம் ரவி மற்றும் இலங்கையின் குமார் தர்மசேன ஆகியோரால் படைக்கப்பட்ட மோசமான சாதனையை, நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் அலீம் தார் சமன் செய்துள்ளனர்.

10ல் மேற்கிந்திய தீவுவை சேர்ந்த நடுவர் ஜோயல் வில்சன் எடுத்த முடிவு மட்டும் 8 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எட்க்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 1-0 என்ற வெற்றி கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

நடுவர்களின் தொடர் தவறான முடிவால் கடுப்பான ரசிகர்கள், ஜோயல் வில்சனின் விக்கிபீடியா பக்கத்தில் தகவல்களை மாற்றியுள்ளனர். அதில், ஜோயல் வில்சன் ஒரு குருட்டு சர்வதேச கிரிக்கெட் நடுவர் என மாற்றியுள்ளனர்.

எனினும், குருட்டு என்ற வார்த்தை நீக்கப்பட்டாலும் இது முடிவடையவில்லை. இதனையடுத்து, டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஜோயல் வில்சன் ஒரு சர்வதேச கிரிக்கெட் நடுவரே கிடையாது என மாற்றப்பட்டது. அதன் பின்னரும் ஜோயல் வில்சனின் விக்கிபீடியா பக்கம் திருத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயரடுக்கு நடுவர் குழு உறுபினராக ஜோயல் வில்சன் நியமிக்கப்பட்டார். முதல் போட்டியில் நடுவர்கள் இழைத்த தவறுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்