ராணுவ பட்டாலியனுடன் கைப்பந்து விளையாடும் டோனி! வெளியான வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, பிராந்திய ராணுவ பட்டாலியனுடன் கைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் ஆக இருக்கும் டோனி, கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத விடுப்பு எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்த அவர், தற்போது ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் இணைந்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் விக்டர் படையில் இணைந்திருப்பார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ராணுவ உடையில் இருக்கும் டோனி, கிரிக்கெட் மட்டையில் கையொப்பமிடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பிராந்திய ராணுவ பட்டாலியனில் உள்ள உறுப்பினர்களுடன் டோனி கைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது டோனி ரோந்து, காவலர் மற்றும் பிந்தைய கடமை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்