உலகிலேயே நண்பர்களை போல பெரிய வரம் இல்லை! ஹர்பஜன் சிங்கின் தமிழ் வாழ்த்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் நண்பர்கள் தின வாழ்த்து கூறியுள்ளார். அவரது வாழ்த்து பதிவில், ‘நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க. ஜல்லிக்கட்டு சம்பவமும், சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.

கும்பலா சுத்துனாலும், ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான், நட்பும் மச்சானும் துணை. Wishing all my dear Friends' என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்