என் வாழ்க்கையின் மோசமான நாள்... இன்ஸ்டாகிராமில் உருகிய மார்ட்டின் கப்தில்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது என் வாழ்நாளில் மோசமான நாள் என நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதிக பவுண்டரில் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய போது, இரண்டாவது ரன்னுக்கு எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய மார்ட்டின் கப்தில் அவுட் செய்யப்பட்டார்.

இதனால் போட்டியில் தோல்வியடைந்ததும், நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் மைதானத்திலே கண்கலங்கினார். அவரை சக வீரர்கள் உட்பட இங்கிலாந்து அணியை சேர்ந்த வீரர்களும் சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் மார்ட்டின் கப்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டது என்பதை நம்புவது கடினமாக உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் மோசமான நாள் அது என்று நான் நினைக்கிறேன்!

பல வித்தியாசமான உணர்ச்சிகள், ஆனால் முக்கியமாக நியூசிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், ஒரு பெரிய குழுவினருடன் விளையாடியதையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்