கோஹ்லி வார்த்தைக்கு கட்டுப்பட்ட டோனிக்கு நேர்ந்த நிலை? கசிந்தது தகவல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் வேண்டுகோளின் பேரில் 2020 டி20 உலகக் கோப்பை வரை, டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓய்வு குறிதது டோனியே முடிவு செய்வார், ஆனால், இந்திய அணியின் எதிர்காலம் தேர்வாளர்களின் கையில் தான் உள்ளது என, டோனியை ஓரங்கட்டும் பாணியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியிருந்தார்.

இந்நிலையில், கோஹ்லி கேட்டு கொண்டதால் மட்டுமே, டோனி தனது ஓய்வு குறித்து வாய் திறக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டோனிக்கு உடல் தகுதி பிரச்சனை ஏதுமில்லை. அணிக்குத் தேவை என்றால் வரும் உலகக் கோப்பை டி20 தொடர் வரை அவரால் சிறப்பாக விளையாட முடியும்.

ரிஷாப் விக்கெட் கீப்பராக இருக்கும்போது மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த டோனியை வைத்துக்கொள்ளலாம். மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்குப் பதில் அந்த இடத்தில் டோனி இருந்தால் சிறப்பாக இருக்கும்.

அதோடு, டோனியின் ஆலோசனை கோஹ்லிக்கு தேவை. அதனால் இன்னும் சில காலம் அவர் அணியில் இருக்க வேண்டும் என்பது கோஹ்லியின் ஆசை. இதற்காகவே ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

கோஹ்லியின் வேண்டுகோளின் பேரில் 2020 டி20 உலகக் கோப்பை வரை, டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க உள்ளதாக கோஹ்லிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்