இந்திய வீரரை மணந்த அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய டென்னிஸ் வீரரை திருமணம் செய்துள்ள அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் அலிசன் ரிஸ்க், இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடந்த முடிந்த 2019ம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய அலிசன் ரிஸ்க், தன்னுடைய நீண்ட நாள் காதலரான இந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு 'Baar Baar Dekho' என்கிற இந்தி பாடலுக்கு அலிசன் தன்னுடைய தோழியுடன் நடனமாடும் வீடியோ காட்சியினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அவர்களை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்