உனக்காக நாடே அழுவுது டோனி.. ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோல்வியைடைந்ததை அடுத்து டோனி ஓய்வு பெறுவார் என செய்திகள் வரும் நிலையில், அவர் ரசிகர்கள் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, டோனி ஓய்வு பெறக்கூடாது என வலியுறுத்தும் வகையில் #DhoniInBillionHearts என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த ஹேஷ்டேக் கீழே ரசிகர்கள் எழுதும் ஒவ்வொரு டுவீட்டும் டோனி மீது அவர்கள் எந்தளவுக்கு அன்பு வைத்துள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளது.

ஒருவர் வெளியிட்டுள்ள மீமில், டோனிக்காக நாடே அழுவுகிறது என்பதை தெரிவித்துள்ளார்.

இன்னொருவரின் பதிவில், இந்தியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது கூட எனக்கு வருத்தமில்லை. ஆனால், டோனி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்தாலே எனக்கு அழுகை வருகிறது என தெரிவித்துள்ளார்.

இப்படியாக பலரும் நெகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...