தோல்விக்கு பின் டோனி எவ்வாறான மனநிலையில் இருக்கிறார்.. வெளியானது புகைப்படம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில் டோனி எப்படி இருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இறுதிவரை போராடிய டோனி, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். டோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கலாம். எனினும், அவுட் ஆன டோனி மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து டோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்வார் என கூறப்பட்டுள்ளது.

தோல்விக்கு பின் டோனி எவ்வாறான மனநிலையில் இருக்கிறார் என்பது குறித்து அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில், இங்கிலாந்தில் மகிழ்ச்சியுடன் டோனி ரசிகர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது, குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்