என்னய்யா இது! இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை, கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் புதிதாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் புதிய ஜெர்ஸி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ரசிகர்களுக்காக பதிவிட்டிருந்தது.

அதற்கு ரசிகர்கள் கிண்டலாக பதிலளித்து வருகின்றனர். இந்தியன் ஆயில் கார்பரேஷன் உடை போல் இந்த ஜெர்ஸி உள்ளது எனவும், Swiggy பணியாட்களின் சீருடை போல் உள்ளது எனவும் ரசிகர்கள் சிலர் கலாய்த்துள்ளனர்.

மற்றொரு ரசிகர் ஒருபடி மேலே போய், Horlicks உடன் ஜெர்ஸியை ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்