டோனி-கோஹ்லி இருவரும் மிகச் சிறந்த ஆளுமைகள்! இந்திய அணியின் பயிற்சியாளர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் டோனி இருவரும் மிகச் சிறந்த ஆளுமைகள் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானதால் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது.

எனினும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் துடுப்பாட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, இந்தப் போட்டிகளில் டோனியின் ஆட்டம் குறித்து முன்னாள் ஜாம்பவான் வீரர்களான சச்சின், சேவாக் ஆகியோரே விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘டோனி மற்றும் கோஹ்லி ஆகிய இருவருமே மிகச் சிறந்த ஆளுமைகள். இவர்கள் இருவரும் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் சாம்பியன் வீரர்கள்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆட்டத்தை மாற்றுவது குறித்து டோனியிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசித்து வருவதாகவும், இந்திய அணியின் வீரர்களிடமும் அணியின் முன்னேற்றம் குறித்து அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்திருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்