டோனி கூறியதை அப்படியே செய்தேன்! ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஷமி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

சவுதாம்ப்டானில் நேற்று நடந்த லீக் போட்டியில், இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்திய அணி நிர்ணயித்த 225 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் நபி, ஆலம், முஜீப் ரஹ்மான் ஆகியோரின் விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி வீழ்த்தினார்.

கடைசி ஓவரை வீசிய ஷமி, அரைசதம் அடித்த நபியை அவுட் ஆக்கினார். அப்போது ஆப்கானின் வெற்றிக்கு 3 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Reuters

அதனைத் தொடர்ந்து பந்து வீசிய ஷமி அடுத்தடுத்து ஆலம், முஜீப் ரஹ்மான் இருவரையும் போல்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்நிலையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறித்து ஷமி கூறுகையில்,

‘என்னுடைய திட்டம் ஒன்றுதான். யார்க்கர் வீச வேண்டும். டோனியும் அதனை தான் என்னிடம் அறிவுறுத்தினார். பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்துவிட வேண்டாம். ஹாட்ரிக் எடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இது மிகவும் அரிதான வாய்ப்பு. ஒரே மாதிரி பந்துவீசுங்கள் என்றார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் டோனி மந்தமாக விளையாடி 28(42) ஓட்டங்கள் எடுத்ததற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், ஷமிக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த அவர் யோசனை கொடுத்ததை அறிந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers