முதல் சர்வதேச வெற்றி: ஆனந்த கண்ணீர் வடித்த வீராங்கனையின் வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் ரக்பி அணி தன்னுடைய முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியானது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் நேருக்குநேர் மோதின.

துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீராங்கனைகள் 21-19 என்கிற கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்களுடைய முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்தனர்.

போட்டி முடிந்த பின்னர் இந்திய வீராங்கனை ஒருவர், ஆண்கள் அணியை சேர்ந்த வீரரிடம் அழுதுகொண்டிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers