கனடாவில் இருந்து இதற்காக தான் இங்கு வந்தேன்! வைரலாகும் இந்திய ரசிகையின் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் ரசிகையின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி சற்று முன்னர் துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியை காண இந்திய ரசிகை ஒருவர் கனடாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.

அந்த ரசிகை மைதானத்தில் நின்றபடி ஒரு பதாகையை கையில் வைத்துள்ளார்.

அதில், டோனி மற்றும் கோஹ்லியை காண்பதற்காகவே கனடாவில் இருந்து வந்துள்ளேன் என எழுதப்பட்டுள்ளது. இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...