கிரிக்கெட் மனிதநேயத்தை வளர்க்கிறது: சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் பள்ளி சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விராட் கோஹ்லி, கிரிக்கெட் ஒரு குருவைப் போல உள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று இந்திய அணி எதிர்கொள்கிறது. இதற்கிடையில், சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்டது.

இங்கிலாந்தின் புகழ்மிக்க பவுல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டி முடிந்த பின்னர் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, சிறுவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் கிரிக்கெட் என்பது மனிதநேயத்தை வளர்ப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து மேலும் கோஹ்லி கூறுகையில், ‘கிரிக்கெட் என்பது சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நம்புகிறேன். கிரிக்கெட் உண்மையில் மனிதநேயத்தை வளர்க்கிறது. மேலும் வாழ்வின் முக்கிய கட்டங்களை புரிய வைக்கிறது.

கிரிக்கெட் விளையாடினால் அனைவரும் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். கடினமான காலங்களில் இருந்து எப்படி மீள முடியும் என்பதை கிரிக்கெட் நமக்கு தெளிவாக உணர்த்தும்.

இதனால்தான் கிரிக்கெட் ஒரு சிறந்த குருவைப் போல வாழ்க்கையை நமக்கு எடுத்துரைக்கிறது என்பதை உணர்ந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers