உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியிஇளைஞர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்