இலங்கைக்கு தான் எங்கள் ஆதரவு! நெகிழ்ந்த பிரித்தானிய தம்பதி... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பிரித்தானிய தம்பதி இலங்கை கிரிக்கெட் அணிக்கு தான் தங்களின் ஆதரவு என கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு பிரித்தானிய தம்பதி இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தங்களின் ஆதரவு கிடையாது, இலங்கைக்கு தான் ஆதரவு என கூறியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இன்றைய போட்டியில் இலங்கைக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள் என கேட்கிறீர்கள், ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக சுனாமிக்கு பிறகு இலங்கையர்களுக்கு நாங்கள் வீடு கட்டி தருகிறோம்.

நாங்கள் பொதுவாக எப்போதும் yorkshire அணிக்கு தான் ஆதரவு தருவோம், ஆனால் இன்று இலங்கைக்கு ஆதரவு கொடுக்கிறோம்.

இங்கிலாந்து எதிரணியாக இருந்தாலும் இலங்கை அணிக்கு தான் இன்று எங்கள் ஆதரவு. இலங்கை அணி உலகக்கோப்பையை வெல்லும் என நம்புகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்