வலை பயிற்சியின் போது தமிழக வீரர் காயம்: பதற்றத்தில் அணி நிர்வாகம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நேற்று மாலை வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தமிழக வீரர் விஜய் சங்கர் காயமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் அணியிலிருந்து விலகி, அவருக்கு பதில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் அணியில் இணைய உள்ளார்.

அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த நட்சத்திர பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தொடை எலும்பு சிரமம் காரணாமாக பாதியிலேயே வெளியேறினார்.

இதனால் அவரும் இரண்டு போட்டிகளுக்கு விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பும்ரா வீசிய பந்து விஜய் சங்கரின் கால் விரலில் பட்டுள்ளது. உடனே அவர் வலியில் துடித்ததால், அணி நிர்வாகம் பதற்றமடைந்துள்ளது.

ஆனால் அவரது வலி குறைந்து தற்போது நலமுடன் இருப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்