அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியல் - இந்திய வீரார் கோஹ்லிக்கு...?

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

2018ல் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி இடம் பெற்றுள்ளார்.

2018 ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய 100 விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், 881 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி உள்ள அர்ஜெண்டீன கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

இந்த பட்டியிலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி 100வது இடத்தை பிடித்துள்ளார். இதில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் இவர்தான் அதாவது 2018ஆம் ஆண்டில் கோஹ்லி 173கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், 3வது இடத்தில் நெய்மரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்