குடிநீரில் கழுவப்பட்ட விராட் கோஹ்லியின் சொகுசு கார்கள்... வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

விராட் கோஹ்லியின் சொகுசு கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் குரூர்கிரம் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

அந்த கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது.

கோஹ்லி வீட்டின் பணியாளர்கள் குடிநீரை பயன்படுத்தி கார்களை கழுவி வந்துள்ளனர்.

அதைக் கண்ட பக்கத்துக்கு வீட்டுக்காரர், பொறுக்க முடியாமல் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் கோஹ்லி வீட்டில் காருக்கு குடிநீரை பயன்படுத்தி கழுவி வந்த பணியாளரை கையும், களவுமாக பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர்.

எனினும், கோஹ்லிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, அபராதத் தொகைக்கான சார்ஜ் ஷீட் அந்த பணியாளர் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் இருக்கும் சூழலில் இப்படி செய்வது சரியா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்