ராணுவ முத்திரையுடன் விளையாடிய டோனி: தடை விதிக்குமாறு ஐசிசி கோரிக்கை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த டோனிக்கு தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி தன்னுடைய கையுறையில், இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்பதன் முத்திரையை பயன்படுத்தினார்.

இந்த புகைப்படமானது இணையதளங்கள் முழுவதும் வைரலானது.

இந்த நிலையில் ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த, டோனிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு தடை விதிக்குமாறு பிசிசிஐ-க்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக 2015ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்