வரலாற்று சாதனை படைக்க உள்ள இர்பான் பதான்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

வரலாற்றில் முதன்முறையாக வேறு நாட்டு லீக் போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தேர்வாகி உள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 2,800 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஐபில் போட்டிகளில் பங்கேற்காத பதான், தற்போது மேற்கிந்திய மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கிரீபியன் கிரிக்கெட் லீக்(சிபிஎல்) தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வேறு நாட்டு லீக்கில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய வீரர் இர்பான் பதான் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த அறிவிப்பினை கரீபியன் லீக் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தொடரானது செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 12 வரை நடைபெற உள்ளது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இர்பான் பதான் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் அனுமதிக்காத நிலையில், இர்பான் பதான் ஏலத்தில் எடுக்கப்பட்டால் வரலாற்று சாதனையை படைத்து விடுவார்.

முன்னதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து, இர்பான் பதான் தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்து தகவல் வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers