தூக்கத்தில் இருந்த பெண்ணை சீரழித்த கிரிக்கெட் வீரர்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் தூக்கத்தில் இருந்த பெண்ணை கற்பழித்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பெர்ன் என்ற கிரிக்கெட் வீரர், வொர்செஸ்டர்ஷைர் கௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார்.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விருந்து ஒன்றிற்கு சென்ற அலெக்ஸ் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன்பின்னர், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக சீரழித்துள்ளார்.

இந்த விவகராம் தொடர்பில் குறித்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அலெக்சின் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்