ஐயோ! அதற்கு அர்த்தம் அதுவல்ல.. புகைப்படத்தால் பதறிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தான் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பால்க்னர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீர்ர் ஜேம்ஸ் பால்க்னர். கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய இவர், அதன் பின்னர் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் தனது 29வது பிறந்தநாளை பால்க்னர் கொண்டாடினார். தனது தாய் மற்றும் ஆண் நண்பருடன் பிறந்தநாளை கொண்டாடிய அவர், இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அத்துடன் அதில் பாய் பிரண்ட் உடன் மற்றும் தாயுடன் பிறந்தநாள் இரவு விருந்து என குறிப்பிட்டார். இதனால் இந்த புகைப்படம் வைரலாக பரவியது. பாய் பிரண்ட் என பால்க்னர் பதிவிட்டதை குறிப்பிட்டு அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று செய்திகள் பரவின.

இதனால் பதறிப்போன பால்க்னர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் வெளியிட்ட போஸ்ட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது. நான் ஒரு Gay இல்லை. ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் இருப்பவர் தனது சிறந்த நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்