அந்த தருணம் மனதளவில் உடைந்து போனேன்.. ஐபிஎல்-யை விட்டு வெளியேறிய வார்னர் உருக்கம்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

விளையாட தடை விதிக்கப்பட்டபோது மனதளவில் உடைந்து போனேன் என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 48வது லீக் போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் 56 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. டேவிட் வார்னருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியுடன் டேவிட் வார்னர் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறுகிறார்.

போட்டி முடிந்த பின்னர் டேவிட் வார்னர் கூறுகையில், ‘தடை செய்யப்பட்டபோது மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். எனது குடும்பத்தினர், குறிப்பாக மனைவி மற்றும் மகள்கள் என்னை மீட்டெடுத்தார்கள். அதன்பிறகு அவர்களுடன் அதிக நேரம் செலவழித்து என்னை தைரியப்படுத்திக் கொண்டேன்.

இந்த ஆண்டு சீசனின் துவக்கத்தில் நான் இப்படி ஆடுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயன்றேன். அதன் பலனாகவே இவ்வளவு ஓட்டங்களை குவிக்க முடிந்தது. எனக்கு பக்கபலமாக ஜானி பேர்ஸ்டோவ் இருந்தார்.

சில நேரங்களில் என் தவறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எனது பங்களிப்பை நிச்சயம் தர முயற்சிப்பேன். வரும் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்