டோனி-கோஹ்லி எனக்கு அதை கொடுத்தது அதிர்ஷ்டமானது! அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் நெகிழ்ச்சி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தனக்கு ஜெர்ஸியை கொடுத்த டோனி மற்றும் கோஹ்லி இருவருக்கும் அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 2 போட்டிகள் டி20 தொடரை அவுஸ்திரேலியா வென்றது. அதன் பின்னர் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.

ஆனால், அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்து ஒன்றரை மாதம் ஆகும் நிலையில், அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அதில் அவர் குறிப்பிட்ட பதிவில் கூறுகையில், ‘இந்தியாவிற்கு எதிரான கடைசி தொடரில் விளையாடியபோது டோனி மற்றும் கோஹ்லி எனக்கு தங்கள் ஜெர்ஸியை கொடுத்தது மிக அதிர்ஷ்டமானது.

அதே நேரத்தில் களத்தில் நாங்கள் எங்கள் நாடுகளுக்காக கடுமையாக மோதிக்கொண்டோம். நான் விளையாடிய அனைத்து போட்டிகளில் இந்திய தொடரில் விளையாடிய 2 போட்டிகளை பெருமையாக மதிக்கிறேன்.

இந்த வாய்ப்பை எங்களுக்கு தந்ததால் பெருமை கொள்வதற்கும், பாராட்டுவதற்கும் இது முக்கிய நேரமாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...