வீடும் தரவில்லை.. பணமும் தரவில்லை! தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த டோனி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரர் எம்.எஸ்.டோனி அமரப்பள்ளி குழுமத்துக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியிடம் தனக்கு பங்களா வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி ஒப்பந்தம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரை விளம்பர தூதராக நியமித்தது அமரப்பள்ளி நிறுவனம். அதன்படி கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை, அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார் டோனி. இந்நிலையில் தான் அந்நிறுவனத்திற்கு எதிராக டோனி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் இதுதொடர்பாக கூறுகையில், ‘ராஞ்சியில் அமரப்பள்ளி சஃபாரி திட்டத்தில் பங்களா வீடு ஒன்றை முன்பதிவு செய்திருந்தேன். அதேபோல அந்நிறுவனத்தின் அந்த திட்டத்துக்கு விளம்பர தூதராகவும் இருந்தேன்.

அந்நிறுவனம் விளம்பர தூதருக்கான பணத்தை தராமல், பங்களாவையும் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது’ என தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் பெற்று தருமாறு உச்சநீதிமன்றத்தில் டோனி மனுதாக்கல் செய்திருக்கிறார்.

இதுவரை 46 ஆயிரம் பேர், தாங்கள் பணம் கொடுத்த பின்னரும் அமரப்பள்ளி நிறுவனம் வீடு ஒதுக்கித் தரவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...