பிராவோவிற்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் விளையாடிய டோனி.. சர்ச்சைக்கு பதிலளித்த பயிற்சியாளர் பிளம்மிங்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் விளையாடிய விவகாரத்தில், டோனியை கேள்வி கேட்க மாட்டேன் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் 19வது ஓவரில் டோனி சில ஓட்டங்களை விட்டதும், பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காததுமே தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தது.

அதற்கு டோனியும் விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்த விடயம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘தான் சிக்சர்கள் அடிக்க முடியும் என்று டோனி உணர்ந்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். டோனி அனைத்தையும் கணக்கிட்டு செயல்படுபவர். அதனால் தான் அவரது முடிவு நான் டோனியை எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்.

ஆம். பிராவோவும் பவர் ஹிட்டிங் செய்யக்கூடியவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இப்படித்தான் வெற்றி பெறப்போகிறோம் என்று டோனி முடிவெடுத்தால், அவருக்கு நான் எப்போதும் ஆதரவாகத்தான் இருப்பேன்.

நிறைய முறை அவர் இவ்வாறு வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்தப் போட்டியிலும் கூட அவர் நெருங்கி வந்து விட்டார். ஆகவே நான் கேள்வி கேட்கப்போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்