120 கோடி ரூபாயை கட்டுங்கள்.. இல்லையேல் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்! மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிக்கை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மகாராஷ்டிரா அரசு ரூ.120 கோடி பாக்கி தொகையை கட்டிவிட்டு குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள் அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை நகரில் உள்ள புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்று வான்கடே கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் 43,977.93 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தை, 50 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு வாங்கியது.

இந்த குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், ஒப்பந்தத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் புதுப்பிக்கவில்லை. அத்துடன் மகாராஷ்டிரா அரசுக்கு ரூ.120 கோடியை பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. அதில், 120 கோடி ரூபாய் பாக்கியை பணத்தை கட்டுங்கள். அதன்பின் குத்தகையை புதுப்பியுங்கள் அல்லது மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மும்பை நகர மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘பாக்கி தொகை நிலுவை குறித்த பிரச்சனை இருக்கும்போதே, மும்பை கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு விண்ணப்பித்துள்ளது.

அவர்களுடைய பெருமையை பார்க்கும்பொழுது 120 கோடி ரூபாய் சிறிய தொகைதான். இடைக்கால கூட்டமோ அல்லது கால நீட்டிப்போ கிடையாது. மே 3ஆம் திகதிக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்