காலை உணவின்போது கொழும்பு ஹொட்டலில் வெடித்த குண்டு.... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தோம்: இந்திய வீரர் கும்பளே

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே அதிர்ஷ்வசமாக உயிர்தப்பியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,

விடுமுறைக்காக ஒரு குழுவாக சேர்ந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தோம். காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்.

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காகவும், அழகிய இலங்கைக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்