ராகுல் டிராவிட் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது! காரணம் என்ன?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வரும் 18ஆம் திகதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ராகுல் டிராவிட் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராகவும் உள்ள ராகுல் டிராவிட், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார்.

ஆனால் தற்போது சாந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். வேறு பகுதிக்கு அவர் மாறிய பின்னர், அந்த இடத்தின் முகவரியை வாக்காளர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இதனத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

இரண்டு முறை அவர்கள் சென்றபோதும் ராகுல் டிராவிட் வெளிநாடு சென்றிருந்ததால், அவரது வீட்டில் நுழைய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் தான் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,

‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, கடந்த மார்ச் 16ஆம் திகதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் அதிகாரிகள் தனது இல்லத்திற்கு சென்றபோது ஸ்பெயினில் இருந்ததாகவும், ஆனால் வாக்களிக்க அவர் கர்நாடகா வருவதற்கு ஆர்வமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers