ஐ.பி.எல் வெளிநாட்டு வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: எச்சரிக்கும் உளவு அமைப்புகள்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக சில உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்