பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்! இலங்கை வீரர்கள் உட்பட பலர் இரங்கல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் புரூஸ் யார்ட்லே மரணடைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்ட் போட்டியிலும், 7 ஒருநாள் போட்டிகளிலும் புரூஸ் விளையாடியுள்ளார்.

இரண்டிலும் சேர்த்து மொத்தமாக 1036 ரன்களை மொத்தமாக எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரின் அதிகபட்ச ரன்கள் 74 ஆகும்.

சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த புரூஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 126 விக்கெட்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 1983ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புரூஸ் இன்று மரணமடைந்தார்.

அவரின் இறப்புக்கு அவுஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்