விதிமுறை இருந்தாலும் அஸ்வின் அப்படி செய்யலாமா? ஜென்டில்மேன் டிராவிட்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஜோஸ் பட்லரை சர்ச்சைக்குரிய முறையில் அஸ்வின் அவுட் செய்தது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என ஜென்டில்மேன் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், எதிரணி வீரர் ஜோஸ் பட்லரை சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் செய்து வெளியேற்றினார்.

இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஸ்வினின் செயல் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘மன்கட்’ இந்த முறையில் ஒரு வீரரை அவுட்டாக்கினாலும், அணித்தலைவர் அந்த முறையை விரும்பவில்லை என்று கருதினால் நாட்-அவுட் என்று அறிவிக்கப்படுவார்கள்.

ஆனால், பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வினே இந்த முறையில் அவுட் கேட்டதால் பட்லருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்நிலையில், ஜென்டில்மேன் வீரர் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறுகையில்,

‘கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. பட்லரை அஸ்வின் அவுட்டாக்கிய முறை கிரிக்கெட் விதி முறையில் இருக்கிறது. ஆனால் அந்த முறை விளையாட்டு உணர்வுக்கு எதிரானது.

முதலில் எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்க வேண்டியது அவசியமானது. அதை அஸ்வின் ஏன் செய்யவில்லை என்பது தான் ஏமாற்றம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்