கார் பந்தய இயக்குநர் சார்லி வைட்டிங் மரணம்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

புகழ்பெற்ற ஃபார்முலா 1 நிர்வாக அமைப்பின் தலைவரும் பல ஆண்டுகளாக விளையாட்டில் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்த சார்லி வைட்டிங் காலமானார்.

புகழ்பெற்ற ஃபார்முலா 1 நிர்வாக அமைப்பின்தலைவர் சார்லி வைட்டிங் சிறிது காலமாகவே கடும் நுரையீரல் நோயில் அவர் அவதிப்பட்டுவந்தார்.

ஆஸ்திரேலிய கிராண் பிரீ பந்தயத்தை வார இறுதியில்தொடங்கி வைப்பதற்காக அவர் மெல்போர்னில் இருந்தார்.

இதனிடையே இன்று காலை நுரையீரல் பிரச்சினைதீவிரமடைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

எஃப் 1 என்ற ஒன்று உலகம் முழுதும் பிரசித்திபெற்றுள்ளது என்றால் அதற்கு வைட்டிங் ஒரு முக்கிய காரணம், இந்தப் பந்தயங்களின்விதிமுறைகளை வடிவமைத்தவரும் அவரே.

பார்முலா 1 நிர்வாகக் கமிட்டியில் டெக்னிக்கல் டைரக்டராக வைட்டிங் 1988-ல் சேர்ந்தார். முதலில் இவர் ஒரு சீஃப்மெக்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்