இந்திய அணியில் விளையாடிய தமிழக வீரருக்கு நடந்த திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த அபினவ் முகுந்துக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த அபினவ் முகுந்த் தமிழக அணிக்கு இடைவிடாது பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த அபினவ் முகுந்த், சரிவர செயல்படாததால் அணியில் நீடிக்கவில்லை.

2011-ல் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அபினவ் விளையாடினார்.

அறிமுகமான ஆறு ஆண்டுகள் கழித்து, அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2017ல் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார், ஆனால் அவரது தேர்வு நியாயப்படுத்த தவறிவிட்டார்.

பார்டர்-கவாஸ்கர் தொடரில் தோல்வி அடைந்தபின், அவர் இலங்கைத் தொடருக்கு அதிர்ஷ்டவசமாக இடம்பிடித்திருந்தார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது மோசமான செயல்திறன் தொடர்ந்தது.

அவர் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுப்பதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட் ஆனார்.

இதன்பின்னர் அபினவால் அணிக்கு திரும்ப முடியவில்லை.

இந்நிலையில் சென்னையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்திய வீரரான சென்னை வாழ் தினேஷ் கார்த்திக் அபினவ் முகுந்தின் நீண்டகால நண்பர்.

அவர் அபினவ் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அதன் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்